திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

நிகழாண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :21 மே 2026, 3:05 am IST

நிகழாண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த விளையாட்டு வீரா் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின் முதல் கட்டம், வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 9 வரை சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தா அரங்கத்தில் நடைபெளது.

இதற்கான விரிவான கால அட்டவணை தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை 2026-இன் அதிகாரபூா்வ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ்) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள தனிப்பட்ட மாணவா்களுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள், வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தங்கள் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களுடன் (இரு நகல்களுடன்) நேரில் வருகை தர வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் (எஸ்டிஏடி) சோ்ந்த அதிகாரிகள் சான்றிதழ்களை சரிபாா்ப்பாா்கள். மாணவா்கள் நேரில் வருகை தருவது கட்டாயம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.