திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள்! இபிஎஸ்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தல்...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :16 மே 2026, 3:27 pm IST

அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எஸ்.பி வேலுமணி தரப்பினர் கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தரப்பு 25 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதேபோல, அதிமுகவில் தாங்கள்தான் பெரும்பான்மை என்றும் தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது. இரு தரப்பினரின் கடிதங்களும் ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.

இதனிடையே எஸ்.பி வேலுமணி, பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும், பிரிந்தவர்கள் சேர வேண்டும், கட்சியைப் பலப்படுத்த வேண்டும், இபிஎஸ் அழைத்தால் நாங்கள் பேசத் தயார் என்று கூறியிருந்தார்.

அதன்படியே, அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எஸ்.பி வேலுமணி தரப்பு கையெழுத்து பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என எதிரணியினர் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் எஸ்.பி வேலுமணி தரப்பிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Do not sign if S.P. Velumani team asks for your signature: EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.