திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுமா? முதல்வர் விஜய் ஆலோசனை

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை செய்துவருவது குறித்து...

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 11:25 am IST

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.

முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.

இந்தத் திட்டம் அறிவித்தது முதல் அங்குள்ள மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், பரந்தூர் போராட்டக்களத்திற்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், விவசாய நிலங்களை அழித்துக் கட்டப்படும் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார்.

தற்போது, அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், நேற்று நடந்த தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்திலும் பரந்தூர் விமான நிலையம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் திட்டத்தில் தற்போது என்ன நிலை உள்ளதோ, அதைத் தொடரவும் மேற்கொண்டு எந்தப் பணிகளும் செய்ய வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் பரந்தூர் திட்டத்துக்கென தனியாக ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Vijay is holding consultations with officials regarding the Parandur airport project.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.