பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்காசிய போரின் தாக்கம் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் கடும் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் பல மாதங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் இன்று (மே 15) அதிகாலை நாடு முழுவதும் ஏற்றப்பட்டன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 2.83 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் 103.67-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.86 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ. 95.25-க்கும் விற்பனையாகிறது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருள்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3 மற்றும் டீசல் ரூ.3 என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.
சர்வதேசசந்தையில் கச்சாஎண்ணெயின் விலைகுறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருள்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்த விலை உயர்வு இருசக்கரவாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வங்கிக்கடன் பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
மேலும், இந்தப் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது அன்றாடப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்படவாய்ப்புள்ளது.
எனவே, ஏழை எளிய, நடுத்தரமக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் விஜய்.
Summary
Chief Minister Vijay has written a letter to the Central Government demanding the withdrawal of the petrol and diesel price hike.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








