சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் குடிமைப்பணி அதிகாரிகள் சோதனையில், வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்த 17 பயணிகளின் விரல்களில் அழியா மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வாக்களித்திருந்தனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருந்த 15 பேர் சென்னை விமான நிலையத்திலும், இரண்டு பேர் மதுரை விமான நிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில், அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் முடிந்து விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறகு, அதிகாரிகளில் ஒருவர் அவர்களது கையில் அழியா மை இருந்ததைக் கவனித்து அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பிறகு காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்கள் எங்கெங்கு வாக்களித்தனர் என்ற விவரங்களும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தவெக அரசுக்குக் கால அவகாசம் தேவை: துரை வைகோ!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

சேலம் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



