தமிழ் செய்திகள்
வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த அஸ்ரா கார்க், தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக உளவுத் துறையின் ஐ.ஜி.யாக செந்தில் வேலன் இருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு உளவுத்துறை ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது முதல் அரசு அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத்துறை புதிய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ரா கார்க்
2004 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் இணைந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கி நெல்லை, மதுரை, தருமபுரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பின்னர் சிபிஐ-யில் பணியாற்றிய அவர் மீண்டும் தமிழகத்திற்கு வந்து தென் மண்டல ஐ.ஜி., வடசென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் ஆகிய பணிகளைத் தொடர்ந்து தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்தார்.
கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில், அதுபற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரியது தவெக.
இந்நிலையில் தவெக அரசு பதவியேற்ற நிலையில், அஸ்ரா கார்க் தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Summary
Asra Garg Appointed as IG of Intelligence in tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









