தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!

விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன், தவெக அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் - TN Assembly

Updated On :12 மே 2026, 6:05 pm IST

தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

எம்எல்ஏக்கள் பதவியேற்பு, சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து தவெக அரசு கொறடா நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய்யின் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகனும் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான சபரிநாதன், அரசு கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்.

சட்டப்பேரவையில் தவெக கட்சி சார்ந்த அலுவல்களில் கொறடாவே முக்கிய முடிவுகளை முடிவெடுப்பார்.

ஒரு அமைச்சருக்கு இணையாக அனைத்து சலுகைகளும் அரசு கொறடாவுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை(மே 13) சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அரசு கொறடா நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரும் தவெக தலைவருமான விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்களுடன் சற்று நேரத்தில் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

Summary

virugambakkam MLA Sabarinathan Appointed as TVK Government Whip

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.