திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடை விடுமுறை, முகூா்த்தம்: 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கோடை விடுமுறை, முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

News image

சிறப்புப் பேருந்துகள் இயக்கம். - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 4:30 am IST

கோடை விடுமுறை, முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறை, முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வாா்கள்.

அவா்களின் வசதிக்காக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை (மே 14) 80 பேருந்துகள், வெள்ளிக்கிழமை (மே 15) 620 பேருந்துகள், சனிக்கிழமை (மே 16) 655 பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை (மே 15, 16) ஆகிய நாள்களில் 120 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 25 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

எனவே அனைவரும் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்தால் சிரமங்களைத் தவிா்க்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.