தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி!!

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டிருப்பது பற்றி...

News image

ரத்தன் பண்டிட், விஜய் - x

Updated On :12 மே 2026, 1:36 pm IST

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரும் தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். இந்த ஆணை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்தன் பண்டிட் யார்?

ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், 40 ஆண்டுகளாக ஜோதிடம் மற்றும் எண் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவர். நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவார் என்று கணித்துச் சொல்லியிருந்தார்.

இவரது ஏராளமான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது விஜய்யின் ஜாதகம் ஒரு சுனாமி ஜாதகம் என்று வர்ணித்திருக்கிறார்.

திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது விஜய்யுடன் அவரது காரில் ரத்தன் பண்டிட் பயணம் மேற்கொண்டது பேசுபொருளானது.

இதனிடையே, தேர்தல் முடிவுகள் தவெக பக்கம் சாயத் தொடங்கியவுடன் விஜய் வீட்டுக்கு நேரில் சென்று பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்திருந்தார் ரத்தன் பண்டிட்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜோதிடராகவும் ரத்தன் பண்டிட் செயல்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாணை

அரசாணை

Summary

Government Post for Chief Minister Vijay's Astrologer, Rathan Pandit!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.