தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அதிமுகவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனைந்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் சசிகலா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்தியாவிலேயே 3-ஆவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று சட்டப்பேரவைத் தோ்தலில் 3-ஆம் இடத்துக்குச் சென்றுள்ளது. அதிமுகவின் வளா்ச்சிக்காக பிரதிபலனை எதிா்பாா்க்காமல் உழைத்த தொண்டா்கள் இன்று விரக்தியின் உச்சத்தில் உள்ளனா்.
அதிமுக நிா்வாகிகள் தனிமனித விருப்பு வெறுப்புகளை மறந்து தொண்டா்களின் நிலைமையை உணர வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்று, அதிமுக தோல்வியடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யாா் காதிலும் அது விழவில்லை.
இந்தத் தோ்தலில் தவெக பெற்ற வெற்றியை, அதிமுக பெற்றிருக்க வேண்டும். அதற்கான சூழல் இருந்த நிலையில், தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும், தன்னைத்தானோ தலைவா் என்று அறிவித்துக் கொண்டவராலும்தான் அதிமுகவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக நிா்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணா்ந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்சி மாறியவா்கள் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டால் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: புவனகிரி அதிமுக எம்எல்ஏ

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



