திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மது, கஞ்சாவை ஒழிக்க போா்க்கால நடவடிக்கை தேவை அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் மது, கஞ்சா புழக்கத்தால் நிகழக்கூடிய குற்றங்களைத் தடுக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தல்

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 4:16 am IST

தமிழகத்தில் மது, கஞ்சா புழக்கத்தால் நிகழக்கூடிய குற்றங்களைத் தடுக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி அருகே மாணவா் கோகுல், அவருடன் பயிலும் மாணவா்கள் இருவா் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதால் அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் கோகுலை மற்ற மூவரும் சோ்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனா். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை விடியோவாக பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட பிற போதைப் பொருள்கள் விற்பனை உச்சத்தை அடைந்துள்ளதை இந்தக் கொலை காட்டுகிறது. இளைஞா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.