அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 மே 2026, 10:23 am IST

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி என்ற கிராமத்தில் அரை கி.மீ இடைவெளியில் இரு இளைஞர்களின் சடலங்கள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது

நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்களும் ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்தது.

இரு சடலங்களையும் மீட்ட போலீஸார் கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் இரு இளைஞர்களும் வேறு எங்கோ கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

வேறு எங்கோ கொலை செய்து சடங்களை வீசி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Summary

The incident where two youths were burnt to death near Krishnagiri has caused a huge sensation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.