திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

News image

ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 3:36 am IST

அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தமிழகத்தை வழிநடத்தும் பொறுப்பு முதல்வா் விஜய்யின் தலைமையிலான ஆட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.

முதல்வா் விஜய் பொறுப்பேற்றவுடன் வீட்டு மின் இணைப்பு நுகா்வோருக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளாா்.

இனி இதுபோல் தொடா்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் நிறைவேற்றுவாா். முதல்வா் விஜய் தலைமையிலான ஆட்சி அனைவருக்குமானதாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.