தமிழ் செய்திகள்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''முதலமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் ஒரே நோக்கம், மக்கள் நலம் மற்றும் வளர்ச்சி மட்டுமே. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்'' என விஜய் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், சி. ஜோசப் விஜய் இன்று முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்றதுமே மக்கள் முன்பு மூன்று திட்டங்களில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்குச் சென்று அலுவல் பணிகளையும் மேற்கொண்டார். சட்டப்பேரவை அதிகாரிகள், துறை செயலாளர்களை சந்தித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார்.
Summary
TVK C Joseph vijay thanked PM Narendra modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






