தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்

அமைச்சராக இன்று பதவியேற்றது குறித்து கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தது தொடர்பாக...

News image

முதல்வர் விஜய்யுடன் செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 1:58 pm IST

தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபி தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்ற பின்பு, “என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று (மே 10) தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், அவருடன் தவெகவைச் சார்ந்த செங்கோட்டையன் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இதுகுறித்து பேசிய செங்கோட்டையன், “நம்முடைய முதல்வரோடு இன்று பதவிப் பிரமாணம் செய்தது என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது. ஆகவே, இது இமாலய வெற்றி என்றுதான் கருதுகிறேன்.

அவருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் நான் கூர்ந்து கவனித்தேன். புரட்சித்தலைவருடனும், அம்மாவுடனும் பயணம் செய்திருக்கிறேன். முதல்வர் விஜய்யோடு பயணிக்கும் போதும் அதேமாதிரி உணர்கிறேன்.

இந்த அரசுக்கு என் உயிர்மூச்சுள்ள வரை, உறுதுணையாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

Summary

K.A. Sengottaiyan Chief Coordinator of the ThVK Executive Committee and MLA for the Gobi constituency stated that taking oath as a Minister today is "something I never imagined would happen in my lifetime."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.