தமிழ் செய்திகள்
விஜய் அமைச்சரவையில் அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்கும் நிலையில் அவர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள்.
என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெகவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகர், தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை முதல்வராக நியமித்து அதற்கான உத்தரவை சனிக்கிழமை வழங்கினார். இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வராக விஜய் பதவியேற்கிறார்.
இதையொட்டி, முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் தலைமையில் 6000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
As nine individuals are set to assume office as ministers in the Vijay cabinet, the Governor's House has released the list of their names.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










