தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

அதிமுக கூட்டத்தில் 5 உறுப்பினர்கள் மிஸ்ஸிங்! வாழ்த்து சொன்ன பழனிசாமி! பின்னணி என்ன?

அதிமுக கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் ஆட்சிக்கு வாழ்த்து சொன்னார் பழனிசாமி.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 3:17 pm IST

விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு தெரிவிப்பதாக விசிக அறிவித்த சில நிமிடங்களில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அமையவிருக்கும் ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்புதான், சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற அதிமுக பேரவை உறுப்பினர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வான 47 பேரில் 42 பேர் பங்கேற்றிருந்தனர். மற்றவர்கள் எங்கே என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சியமைப்பதில் இடியாப்ப சிக்கல் நிலவி வரும் நிலையில், ஒருபக்கம் அதிமுக தலைமையில் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

இதனால், அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சியமையும் என்றும், அதற்கு திமுக ஆதரவு அளிக்கப்போவதாகவும் கூட பேச்சுகள் எழுந்தன. ஆனால், ஒன்றுமே நடக்காமல் அந்த பேச்சுகள் எழவில்லை என்றும் சில தகவல்களும் பரவி வருகின்றன. திமுக ஆதரவு கொடுக்க மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவிலிருந்து பின்வாங்க நேரிட்டதாகவும் உறுதி செய்யப்படாதத்தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

தவெகவுக்கு ஆதரவா? என்பது குறித்து விசிக தன்னுடைய முடிவை அறிவிக்காத நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள தன்னடைய இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, புதிதாக தேர்வான 47 அதிமுக எம்எல்ஏக்களையும் ஆலோசனைக்கு அழைத்திருந்தார். ஆனால், அதில் 42 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். மற்ற 5 பேரும் எங்கே போனார்கள்? ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து தகவல்கள் இல்லை.

இதற்கிடையே 11 மணிக்கு விசிக தன்னுடைய முடிவை அறிவிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பதாகக் கூறிவிட்டது.

விசிக இந்தத் தகவலை வெளியிட்ட சிறிது நேரத்தில், புதிய ஆட்சிக்கு வாழ்த்துகள் என்று தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு சம்பந்தமே இல்லாத வாழ்த்தை வெளியிட்டிருந்தார்.

இதனால், விசிக ஆதரவு அளிப்பது குறித்து ஏதேனும் தகவல் அதிமுகவுக்கு கிடைத்திருக்கிறதா? அல்லது அதிமுக சார்பில் வேறு ஏதேனும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மறுபக்கம், விசிக ஆதரவு கடிதம் வழங்கிவிடும் என்று தகவல்கள் கூறப்படுகின்றன. மற்றொரு பக்கம் அதிமுக தரப்பில் சிவி சண்முகம் தவெக தலைவர்களை சந்திக்கவிருக்கிறார் என்றும் உறுதி செய்யப்படாத பல தகவல்கள் காற்று போல பரவி வருகிறது.

எனினும், இதுவரை எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்திக்கான பின்னணி மட்டும் என்னவென்று மக்களுக்கு புரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.