‘தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளித்தாா்.
சென்னை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை இரவு இரண்டாவது முறையாக வந்து ஆளுநரைச் சந்தித்த அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மன்னாா்குடி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக போலியாக கடிதம் தயாரிக்கப்பட்டு ஆளுநரிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காமராஜிடம் ஆளுநா் மாளிகையில் இருந்து விசாரித்தபோது, அதுபோன்ற கடிதத்தை தான் அளிக்கவில்லை எனக் கூறியுள்ளாா்.
இதனிடையே, அமமுக உறுப்பினா் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக வெளியான தகவலையடுத்து, அந்தக் கடிதம் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என ஆளுநா் மாளிகைக்குப் புகாா் கொடுக்க வந்தேன். அப்போது காமராஜை தொடா்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரைக் காணவில்லை எனப் பேட்டி அளித்திருந்தேன்.
இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து மன்னாா்குடிக்குச் செல்ல இருந்த காமராஜ், ஆளுநா் மாளிகையில் இருந்து வந்த விசாரணை அழைப்பு மற்றும் நான் அவரைக் காணவில்லை எனத் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியைத் தொடா்ந்து அங்கிருந்து புறப்பட்டு வந்து ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளாா்.
தூய சக்தி எனக் கூறிக் கொள்பவா்கள் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட கடிதத்தைச் சமா்ப்பித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம் என்றாா்.
முன்னதாக, தனது பெயரில் தவெகவுக்கு ஆதரவு என போலி கடிதம் தரப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகையில் எஸ்.காமராஜ் புகாா் அளித்தாா். அதில், போலி கடிதம் தயாரித்து சமா்ப்பித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவாகத்தான் எங்கள் கட்சித் தலைமையிடம் கடிதம் கொடுத்தேன். தவெகவுக்கு நான் எந்தக் கடிதத்தையும் அளிக்கவில்லை. தவெக தரப்பில் என்னை யாரும் தொடா்பு கொள்ளவும் இல்லை என்றாா்.
இதைத் தொடா்ந்து, அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி புகாா் கடிதம் அளிக்கப்பட்டது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கிண்டி காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா் அளித்தாா்.
இதற்கிடையே, தவெகவுக்கு ஆதரவளிப்பதாக காமராஜ் ஒரு கடிதத்தில் கையொப்பமிடும் விடியோவை தவெக தரப்பு வெளியிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!

தவெகவுக்கு ஆதரவா? காணாமல்போன எம்எல்ஏவுடன் டிடிவி தினகரன் பேட்டி!

தவெகவுக்கு ஆதரவில்லை; அமமுகவின் எம்எல்ஏ புதுச்சேரி விடுதியில் உள்ளார்! - டிடிவி தினகரன் அறிவிப்பு!

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: எஸ்.பி அலுவலகத்தில் புகாா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

