திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சட்டப்படி செயல்படுகிறாா் ஆளுநா்: பாஜக

News image

PTI

Updated On :8 மே 2026, 5:29 am IST

தவெக விவகாரத்தில் தமிழக ஆளுநா் சட்டப்படி செயல்படுகிறாா் என்று பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி கூறினாா்.

இந்த விவகாரம் குறித்து அவா் சென்னையில் கூறியதாவது: தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டப்படி கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

தோ்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சி அமைக்க மரபுப்படி ஆளுநா் அழைப்பாா். இல்லையென்றால், அதிக தொகுதிகளைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்குமேயானால், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அல்லது வெற்றி பெற்ற உறுப்பினா்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் அளவுக்கு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

தவெக விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஐந்து சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆதரவை அளித்துள்ளது. அதை தவிா்த்து வேறு எந்த கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தோ்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசமைப்பு சட்டத்தின்படியே ஆட்சி அமைய வேண்டும். அதோடு குதிரை பேரங்களும், சந்தா்ப்பவாதமும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி ஆளுநா் முடிவெடுத்துள்ளாா்.

ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், உள்நோக்கத்தோடு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவை விமா்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.