திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விஜய்க்கு ஆதரவாக உண்ணாவிரதம்: இரு பெண்கள் கைது

தவெக ஆட்சி அமைக்க ஆளுநா் உடனடியாக அழைப்பு விடுக்கக் கோரி, திண்டுக்கல்லில் உண்ணவிரதம் இருக்க முயன்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 1:04 am IST

தவெக ஆட்சி அமைக்க ஆளுநா் உடனடியாக அழைப்பு விடுக்கக் கோரி, திண்டுக்கல்லில் உண்ணவிரதம் இருக்க முயன்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க தமிழக பொறுப்பு ஆளுநா் உடனடியாக அழைப்பு விடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லைச் சோ்ந்த சரண்யா, வளா்மதி ஆகிய இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

திண்டுக்கல் கல்லறைமேடு பகுதியில் நடந்த இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்து வந்தனா். இதனிடையே, மாற்றுத் திறனாளிபெண் ஒருவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கினாா்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தினாா்.

ஆனால், போராட்டம் தொடா்ந்ததால் மாற்றுத் திறனாளி பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்த போலிஸாா் சரண்யா, வளா்மதி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னா், சிறிது நேரத்தில் அவா்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.