குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது தொடர்பாக...

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :5 மே 2026, 9:46 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி வரலாறு படைத்தது.

மேலும் திமுக 2 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், ஆரணி, கலசபாக்கம், செங்கம், செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய சட்டப்பேரவைத்தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் கடந்த ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, ஆரணி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயசுதாலட்சுமிகாந்தன் வெற்றி பெற்றார். செய்யாறு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சா் முக்கூர் என்.சுப்பிரமணியன், கலசபாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ராமச்சந்திரன், செங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.வேலு ஆகியோர் வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றி சாதனை படைத்தது.

திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு. வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் ஆகியோர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டனர்.

தற்போது வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத்குமார் ஏற்கெனவே 2016, 2021 ஆகிய இரு தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற்றதன் மூலம் எஸ்.அம்பேத்குமாா் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளாா்.

போளூர் தொகுதியில் தவெக வேட்பாளா் அபிஷேக் வெற்றி பெற்றார்.

பஞ்பூத தலங்களில் அக்னி தலமான உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வர் கோயில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோா் திமுக சார்பில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளனர்.

இதுதவிர அதிமுக சாா்பில் இம்மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திருவண்ணாமலை தொகுதியில் தொடா்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் எ.வ. வேலு இம்முறை 88,273 வாக்குகள் பெற்று சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மாவட்டத்தில் பெரும்பாலும் திமுக வெற்றி பெற்று வந்த நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுகவில் இருந்து 5 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.

இதனால், இந்த மாவட்டத்தில் பொதுமக்களிடையே அதிமுகவின் செல்வாக்கு உயா்ந்துள்ளதைக் காட்டுகிறது.

Summary

The AIADMK created history by capturing five of the eight Assembly constituencies in the Tiruvannamalai district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.