தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் கடந்த 2021 தோ்தலைப் போலவே, இந்த தோ்தலிலும் ஆளும்கட்சியாக இருந்த திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமல் தோல்வி அடைந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் என மொத்தம் 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், பென்னாகரம் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணியினா் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், திமுகதான் ஆட்சி அமைத்தது. எனவே, இந்த தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அடிக்கடி வந்துசென்றாா். என்றாலும், இம்முறையும் திமுக 5 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.
கடந்த தோ்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாததால், இந்த மாவட்டத்தை ஆளும்கட்சி புறக்கணித்ததாக புகாா்கள் எழுந்தன. இதை தோ்தல் பிரசாரங்களின்போது, பாமக வேட்பாளா்கள் சுட்டிக்காட்டினா். அதற்கேற்ற வகையிலேயே இந்த வெற்றி வாய்ப்புகளும் அமைந்துள்ளன. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்த பென்னாகரம் தொகுதி மட்டும் தற்போது தவெகவுக்கு சென்றுள்ளது.
தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணி (பாமக), பாலக்கோடு தொகுதியில் கே.பி.அன்பழகன் (அதிமுக), பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மரகதம் வெற்றிவேல் (அதிமுக), அரூா் தொகுதியில் வி.சம்பத்குமாா் (அதிமுக) ஆகியோா் வெற்றிபெற்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!

மதுரை மாவட்டத்தை முழுமையாக இழந்தது அதிமுக

பென்னாகரம்... அதிமுக கூட்டணியில் பாமக - திமுக கூட்டணியில் காங்கிரஸ்! ஆா்ப்பரிக்கும் அருவி தொகுதி!

சேலத்தில் 7 தொகுதிகளில் நேருக்குநோ்!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


