பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

மே 2-வது வாரத்தில் தென்மேற்குப் பருவமழை! இந்திய வானிலை!

தென்மேற்குப் பருவமழை தொடங்குவது பற்றி..

News image

வடகிழக்குப் பருவமழை - file photo

Updated On :1 மே 2026, 3:16 pm IST

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் மே இரண்டாவது வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகப் பருவமழை முன்னதாக தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் விதமாகத் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்னதாக தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்தாண்டு மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியோடு, பருவமழைக்கான தொடக்கமாக அமையும் என்பதால் மே 7-ம் தேதிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், பகலில் வெப்பநிலை அதிகரித்தாலும், இரவில் வெப்பச்சலனம் காரணமாகக் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதோடு இந்தாண்டு பலத்த காற்றுடன் நல்ல மழைபொழிவு இருக்கும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The India Meteorological Department has stated that the Southwest Monsoon is expected to begin in the second week of May this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.