திருநீா்மலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரி குட்டையை நிரப்பி கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள், கழிப்பறைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநீா்மலையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஓ.உதயகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் குவாரி குட்டை ஒன்று உள்ளது. தாம்பரம் மாநகராட்சி இந்தக் குட்டையை மண் உள்ளிட்ட கட்டட இடிபாடுகளைக் கொட்டி நிரப்பி 5 வணிக வளாகங்கள், பொது கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. மழைக்காலங்களில் எங்களது பகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுக்க இந்தக் குவாரி குட்டை பெரும் உதவியாக இருக்கும்.
அந்த நீா்நிலையை நிரப்பி கட்டடம் கட்டியுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும், சுற்றச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, நீா்நிலையை நிரப்பிக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், கழிப்பறைகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக வருவாய்த் துறை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு: தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க உத்தரவு

நீலகிரியில் 3,500 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம்

தொழிற்பேட்டை மேம்பாட்டுப் பணி நிலுவைத் தொகை வழங்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு







