மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி - X

Updated On :30 மார்ச் 2026, 7:37 am

தேர்தல் அறிக்கை வெளியிட்டபிறகு 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னோம். ஆனால் அதற்கும் மேலாக வெற்றி பெறுவோம். நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டபிறகு 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நம்ம கொளத்தூர், நம்ம ஸ்டாலின் என கொளத்தூர் தொகுதியில் நான் மேற்கொண்ட பணிகள், இனிமேல் செய்ய வேண்டிய பணிகள் குறித்த புத்தகம் அளித்திருக்கிறேன்.

திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.

4 ஆவது முறையும் கொளத்தூர் தொகுதி வாக்களர்கள் திமுக வேட்பாளராகிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். எப்போதும்போல எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Summary

We will win over 200 seats: Chief Minister M.K. Stalin press meet in kolathur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.