கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளே முதல்வர் மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நேற்றுடன்(ஏப். 4) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், மாநிலம் முழுவதும் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று காலை வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகின்றது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 7,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜன், விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9-ஆம் தேதி ஆகும். ஏப்ரல் 23-இல் வாக்குப் பதிவு நடைபெறும். மே 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Chief Minister Stalin's Nomination Paper Accepted in Kolathur!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்! | MK Stalin | DMK
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


