திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை என்ற கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - யூடியூப் | மு.க. ஸ்டாலின்

Updated On :17 ஏப்ரல் 2026, 8:58 pm IST

தொகுதி மறுவரையறை என்ற கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், "தேனியில் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறபோது, இப்போது ஒரு வெற்றிச் செய்தி வந்திருக்கிறது; நல்ல செய்தி வந்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டு, நாம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி வெறும் முன்னோட்டம்தான். அடுத்து வரவிருக்கும் வெற்றிதான், மாபெரும் வெற்றி.

தேர்தலுக்கு இன்னும் 5 நாள்கள்தான் உள்ளது. ஒருபுறம் கோடையின் வெப்பம்; மறுபுறம் தொகுதி மறுவரையறை என்ற நெருப்பின் வெப்பம். ஆனால், நாம் அதில் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று தெரிவித்தார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! தில்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணைபோகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Black Law Defeated, says Chief Minister MK Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.