தேர்தலையொட்டி நடைபெறும் பிரசாரத்தின்போது இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு, பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம், அண்ணாநகர், தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் பிரசாரத்தை ரத்து செய்வதாக தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தவெக பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தேர்தல் ஆணையத்திடம் தவெக நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
''வாக்களிப்பதைப் போன்று வாக்கு சேகரிக்கச் செல்வதும் ஜனநாயகக் கடமை. தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கிறோம். பிரசாரத்தின்போது இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது.
காவல் துறையில் இன்றும் சிலர் முதல்வர் பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர். கடந்த 8 மாதங்களாகவே எங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு முதல்வர் செயல்படுகிறார்.
கொளத்தூரில் விஜய் பிரசாரத்தைத் தடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனைத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னும் 2 முறை கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டால் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைவார்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தவெகவின் கோரிக்கை. மக்கள் பாதுகாப்பு கருதியே பிரசாரத்தை வில்லிவாக்கத்தில் இன்று நிறுத்தினோம். நாளை தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கவுள்ளோம்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Vijay Campaign struck Another Karur like' incident must not occur: TVK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










