திரைப்படங்களில்தான் ஒரே ஒரு பாடலில் முதல்வராக முடியும் என்று சொல்லிவந்த கூற்றுகளை தவெக தலைவர் விஜய் பொய்யாக்கி, நிஜத்திலும் உண்மையாக்கியிருக்கிறார்.
திமுகவினரோ, அதிமுகவினரோ எதிர்பார்த்த தேர்தல் முடிவு இதுவல்ல என்று சொல்வதைக் காட்டிலும், ஏன், தவெகவினரோ, அக்கட்சியின் தலைவர் விஜய்யோகூட இந்த தேர்தல் வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பதே பொதுவான கருத்து.
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளும் திமுக - அதிமுக என இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலையில், முதல் முறையாக தவெக களம் கண்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த அளவுக்கு இமாலய வெற்றியை தவெக பெறுவதற்கு முழு காரணங்களாக சில அடிப்படை காரணிகள்தான் இருந்தன.
திரை நட்சத்திரம் என்ற பிரபலம் - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைத்துறைக்கும் அரசியலுக்கும் ஏற்கனவே நேரடியாக பாலம்போடப்பட்டிருக்கிறது. விஜய்யின் திரைத்துறை பிரபலம், அவரது தவெக இந்த அளவுக்கு வெற்றி பெறுவதற்கு முழு முதல் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே திரைப்பட நடிகராக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அரசியலில், தங்களது திரைத்துறை செல்வாக்கை அடிப்படையாக வைத்து அரசியலில் நுழைந்து கோலேச்சியிருக்கிறார்கள் என்பது வரலாறு. அனைத்து திரைப் பிரபலங்களுக்குமே அரசியல் வெற்றி என்பது உறுதியானது இல்லை என்றாலும், தவெகவின் இந்த வெற்றிக்கு திரைத்துறை புகழும் காரணம் என்பதை அவர்களது தொண்டர்களே மறுக்க மாட்டார்கள்.
திமுக - பாஜக இரண்டுக்கும் எதிரி என்ற கொள்கை - ஆரம்பம் முதலே விஜய் ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். தமிழகத்தில் ஆளும் திமுக, நாட்டை ஆளும் பாஜக இரண்டையும் எதிரி என்று கொள்கையை அறிவித்தது. அதுமட்டுமல்லாமல், தவெகவுக்கு எந்த மதச் சாயமும் பூச முடியாது என்று அறிவித்ததும் ஒரு காரணம். இதனால், திமுகவை வெறுத்தவர்களுக்கும், பாஜகவுடன் இணைந்ததால் அதிமுகவை வெறுத்தவர்களுக்கும் மாற்றாக மாறினார் விஜய்.
உண்மையில் அவர் அறிவித்த வாக்குறுதிகளுக்காகவோ, பிரசாரத்தில் பேசியதற்காகவோ இத்தனை வாக்குகள் விழவில்லை என்பது நிச்சயம் தவெகவினருக்குத் தெரிந்திருக்கும்.
வாக்காளர்களின் திடீர் மனமாற்றம் - இத்தனை காலமும் திராவிடக் கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து வந்த வாக்காளர்களுக்கு ஏதோ ஒரு மாற்றம் தேவைப்பட்டிருக்கிறது. அது தவெகவாக மாறிவிட்டது. எந்தக் கட்சி வந்தாலும் ஊழல், மக்களை மதிக்காத ஆட்சி அதிகாரம் போன்றவை, விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
சில வேட்பாளர்கள் தெரிவு - சில தொகுதிகளில், அதிமுக மற்றும் திமுகவின் ஆணிவேராக இருந்து அதிருப்தியில் இருந்தவர்கள், நாட்டை உலுக்கிய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் போன்றவர்களை தவெக தன்னுடைய வேட்பாளராக அறிவித்தது.
உதாரணமாக கொளத்தூர் தொகுதியில் திமுக முன்னாள் எம்எல்ஏவும், திமுகவின் வெற்றிக்கு அடித்தளமிட்டவருமான வி.எஸ். பாபு, கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலின் வெற்றிக்காக பாடுபட்டவர். ஆனால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டு அதிமுகவில் இணைந்திருந்த வி.எஸ். பாபுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், 2026 தேர்தலில் அதே கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினையே தோற்கடித்து, ஒட்டுமொத்த தமிழகமும் யார் இந்த வி.எஸ். பாபு என திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இதுபோன்றே தவெக வேட்பாளர்களில் பலரும் சாமானியர்கள், ஏதேனும் ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நியாயம் கோருபவர்களாக இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் நியாயம் கேட்பவர்களாகவே இல்லாமல் நீதியை வகுக்கும் இடத்துக்கு வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் தவெகவின் ஒட்டுமொத்த வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது.
இன்று ஒட்டுமொத்த தமிழகமும் விஜய்யின் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. தவெகவுக்கு வாக்களித்தவர்கள் வெற்றிக் களிப்பிலும், மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீதான கவனத்திலும் இருக்கிறார்கள்.
எத்தனை அடிப்படைகள் இருந்தாலும் மக்கள் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றைத்தான். அதுதான் நல்லாட்சி.
Summary
About the factors that gave TVK victory in the Tamil Nadu elections..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் முன்னிலை! திமுகவின் வாக்குகளை சூறையாடிய தவெக!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!
விடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு



