சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் புதிய கூட்டணி அல்ல என்றும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வெற்றிக் கூட்டணி எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 30) தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உடனான தேநீர் விருந்தில் கூட்டணிக் கட்சியினரிடையே உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக தங்களின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 30) தேநீர் விருந்து நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ முபாரக், மஜகவின் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேநீர் விருந்தின் நிறைவாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நம் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் புதிதாக சேர்ந்துள்ளன. நிச்சயம் வெற்றி பெறுவோம். நம் கூட்டணி புதிய கூட்டணி அல்ல, வெற்றிக் கூட்டணி. உடன் நின்று உறுதியாகப் பயணிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி என முதல்வர் குறிப்பிட்டார்.
Summary
TN Election 2026 We are not a new alliance; we are a winning alliance M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

திமுக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



