சென்னை: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பங்கேற்று தேர்தலை சந்திக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.
வேட்பாளரை வெளியிடும் முன்பு பேசிய மு.க. ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். அதில், 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகின்றன.
திமுக வேட்பாளர்களில் பெண்கள் 18 பேர், முனைவர் 7 பேர், மருத்துவர்கள் 15 பேர் உள்பட பட்டம் படித்தவர்கள் 125 பேர் இடம்பெற்றுள்ளனர்.
வேட்பாளர்கள் பட்டியலில், திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி.சேகர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பட்டியல் தாமதமாக வெளியிடப்பட்டதற்கு, கூட்டணிக் கட்சிகளுடன் அமர்ந்து தொகுதிகள் குறித்து பேசி முடிவு செய்யப்பட்டது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளோம் என்று ஸ்டாலின் கூறினார்.
முக்கிய தொகுதிகளும் வேட்பாளர்களும்
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்
திருச்சுழி - தங்கம் தென்னரசு
மதுரை மத்திய - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
திருவெறும்பூர் - முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி மேற்கு - கே.என். நேரு
கோவை தெற்கு - செந்தில் பாலாஜி
திருக்கோயிலூர் - டாக்டர் பொன். கௌதமசிகாமணி
திருவண்ணாமலை -எ. வ. வேலு
எடப்பாடி - காசி
திருவண்ணாமலை - எ.வ. வேலு
காட்பாடி - துரைமுருகன்
சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
துறைமுகம் - பிகே சேகர்பாபு
பெரம்பூர் - ஆர்.டி. சேகர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புக் கொடி போராட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம்: அமைச்சா் இ. பெரியசாமி

இபிஎஸ்ஸை முதல்வராக்குவோம் என்று மோடி இதுவரை சொல்லியிருக்கிறாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


