தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சிகளான திமுக - அதிமுக இரண்டுமே இந்த முறை அதிக தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து கொடுத்திருப்பதால் இந்த முறை நேரடியாக மோதும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக நேரடியாக களம்கண்ட தொகுதிகள் 173 ஆக இருந்த நிலையில், இம்முறை இது 9 தொகுதிகள் குறைந்து 164 ஆக உள்ளது. கூட்டணிக் கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது இந்த முறை 11 ஆக உள்ளது. இது கடந்த தேர்தலை விட 4 தொகுதிகள் குறைவு. அவரவர் சின்னத்தில் போட்டியிடும் வகையில் கூட்டணிக் கட்சிகளுக்கு 59 தொகுதிகளை திமுக வழங்கியிருக்கிறது.
அதிமுகவோ, கடந்த முறை 179 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 12 தொகுதிகள் குறைந்து இம்முறை 167 தொகுதிகளில்தான் நேரடியாகக் களம்காண்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 62 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 தொகுதிகள் அதிகம்.
இதனால், திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் கடந்த 2021ல் 156 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 135 ஆக மாறியிருக்கிறது.
உதய சூரியன் - இரட்டை இலை நேரடி மோதல் : 135. உதய சூரியன் - அதிமுக கூட்டணிக்கட்சியுடன் மோதல் 40, இரட்டை இலை - திமுக கூட்டணிக் கட்சி 38, திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி : 21.
டெல்டா மற்றும் தெற்கு தொகுதிகளில் சற்று பின்னடைவை சந்தித்து வரும் அதிமுக, அங்குள்ள பல தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. ஆனால், திமுகவோ, தன்னுடைய பலம் வாய்ந்த வடக்கு மற்றும் டெல்டா தொகுதிகளை, கூட்டணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
அதிக இடங்களை அதிமுக கூட்டணிக்கு விட்டுக் கொடுத்திருந்தாலும், தங்களது பலம் வாய்ந்த தொகுதிகளை அதிகம் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்திருப்பது என்னவோ திமுகதான் என்று கூறுகிறார்கள்.
எங்கு திமுகவுக்கு சாதகமில்லையோ, எங்கு போட்டி கடுமையாக இருக்கிறதோ அங்கெல்லாம் திமுக போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய போராடும் முனைப்பில் உள்ளது. அதிமுக 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற 66 தொகுதிகளில் இந்த முறை 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் திமுகவோ 2021 தேர்தலில் வெற்றி பெற்ற 133 தொகுதிகளில் வெறும் 119 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. 14 தொகுதிகளை கூட்டணிக்குக் கொடுத்துள்ளது திமுக. எனவே, அதிகம் விட்டுக் கொடுத்திருப்பது தொகுதிகள் எண்ணிக்கையில் பார்த்தால் அதிமுகவாக இருந்தாலும், பலம் வாய்ந்த தொகுதிகளை விட்டுக்கொடுத்திருப்பது திமுகதான்.
திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள்!
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி உள்பட 121 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன.
திமுக vs அதிமுக போட்டியிடும் தொகுதிகள்: கொளத்தூா், திரு,வி.க.நகா், எழும்பூா் (தனி), , துறைமுகம், விருகம்பாக்கம், தியாகராய நகா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா், ஆா்.கே.நகா், வில்லிவாக்கம், ஆலந்தூா், தாம்பரம், ராயபுரம், மாதவரம், மதுரவாயல், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகா், சேப்பாக்கம்-திருவல்லிகேணி, கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம், முதுகுளத்தூா், பரமக்குடி (தனி), அருப்புக்கோட்டை, கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, சோழவந்தான் (தனி), மதுரை கிழக்கு, திருமயம், விராலிமலை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூா், வேதாரண்யம், பூம்புகாா், புவனகிரி, குறிஞ்சிப்பாடி,நெய்வேலி, திட்டக்குடி, அரியலூா், பெரம்பலூா் (தனி), முசிறி, லால்குடி, திருவெறும்பூா், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், குளித்தலை, ஆலங்குடி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூா், அரவக்குறிச்சி, வேடசந்தூா், திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி), ஆத்தூா், உடுமலைப்பேட்டை, வால்பாறை (தனி), கிணத்துக்கடவு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூா், சூலூா், பல்லடம்,மேட்டுப்பாளையம், குன்னூா், கூடலூா் (தனி),கோபிச்செட்டிபாளையம், அந்தியூா், பவானி, பெருந்துறை, காங்கயம், தாராபுரம் (தனி), குமாரபாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், சேந்தமங்கலம் (தனி), வீரபாண்டி,சேலம் தெற்கு, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூா், ஏற்காடு (தனி), கெங்கவல்லி (தனி), சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், விழுப்புரம், வானூா் (தனி),வந்தவாசி (தனி), செய்யாறு, ஆரணி, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா், செங்கம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு,ஓசூா், வேப்பனஹள்ளி, பா்கூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா்,அணைக்கட்டு,வேலூா், ஆற்காடு,காட்பாடி, காஞ்சிபுரம், மதுராந்தகம் (தனி), செங்கல்பட்டு,
Summary
Regarding the decrease in the number of seats where DMK and AIADMK will directly clash..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவாலான தொகுதிகளை நேரடியாக எதிர்கொள்ளும் திமுக! அதிமுக?

அதிமுகவுக்கு எதிராக 46 தொகுதிகளில் களமிறங்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்
திமுக 165+ (உதய சூரியன் 175+) தொகுதிகளில் போட்டி! யாருக்கு எவ்வளவு?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



