மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ராமதாஸ்!

ராமதாஸ் தரப்பு பாமகவில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

News image

முதல் கட்ட வேட்பாளர்களை அறிவிக்கும் ராமதாஸ் - எக்ஸ்

Updated On :30 மார்ச் 2026, 4:02 pm

ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராமதாஸ் கூட்டணியில் உள்ள சசிகலா நேற்று 21 வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், இன்று ராமதாஸ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

முதல் கட்ட வேட்பாளர்கள்

  • சேலம் மேற்கு - அருள், மாநில இணைப் பொதுச் செயலாளர்

  • வந்தவாசி - முரளி சங்கர், பொதுச் செயலாளர்

  • கும்பகோணம் - ம.க. ஸ்டாலின், மாநில நிர்வாககுழு உறுப்பினர்

  • விருத்தாசலம் - சுரேஷ், மாவட்டச் செயலாளர்

  • மயிலாடுதுறை - சக்திவேல், மாவட்டச் செயலாளர்

ஆகியோர் ராமதாஸ் தரப்பு பாமகவில் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.

சசிகலாவின் கட்சியில் இருந்து முதல் கட்டமாக நேற்று 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சசிகலாவுடன் கூட்டணியில் உள்ள ராமதாஸ் தரப்பு பாமகவில் இருந்து முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களின் முழு விவரம்: இங்கே கிளிக் செய்யவும்

PDF
பாமக (ராமதாஸ்) முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
பார்க்க

Summary

Tn Election 2026 Ramadoss PMK Releases First Phase Candidate List

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.