ராமதாஸ் தலைமையிலான பாமகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது.
இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென முடிவு செய்திருந்த நிலையில், முதல்கட்டமாக 5 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 31) 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் தொகுதியில் ஏகாம்பரம், உத்திரமேரூர் தொகுதியில் ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சங்கர், திருவள்ளூர் தொகுதியில் வெங்கடேசன், செஞ்சி தொகுதியில் கனல் பெருமாள், தருமபுரி தொகுதியில் சரவணன், ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி ரவி, செய்யாறு தொகுதியில் தி. கா.சீனிவாசன், அந்தியூர் தொகுதியில் கோபால், புவனகிரி தொகுதியில் பாலமுருகன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸுடனான மோதலுக்குப் பின்னர் அவரின் மகன் அன்புமணி வசமிருக்கும் பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான வேட்பாளர்கள் ஏற்கனெவே மூன்று பேர் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மீதமுள்ள 15 பேர் அறிவிக்கப்பட்டனர். இதில், அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தனது மருமகளான சௌமியாவுக்கு எதிராக சரவணனை களமிறக்கியுள்ளார் ராமதாஸ்.
Summary
The second list of candidates for the PMK, led by Ramadoss, has been released. This list features 10 candidates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்; மருத்துவமனையில் அனுமதி!
ராமதாஸின் மனு தள்ளுபடி! அன்புமணிக்கே 'மாம்பழம்' சின்னம்!
ராமதாஸ் பாமகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!
மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நடிகர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

