மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” - திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக !

திமுக அரசின் ஊழல் பட்டியலை மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வெளியிட்டதைப் பற்றி...

News image

சென்னை கமலாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன்.

Updated On :31 மார்ச் 2026, 3:17 pm

“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” என்ற தலைப்பில் திமுக அரசின் ஊழல் பட்டியலை மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வெளியிட்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று மாலை தமிழகம் வந்தார்.

சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், “குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” என்ற தலைப்பில் திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிராக நடந்த கொடூர குற்றங்கள், தமிழக மண்ணை போதை கலாசாரத்தின் மூலம் சீரழித்த செயல்கள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.

தமிழகத்தை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிய இந்த ஆட்சியின் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.

திமுக ஆட்சியின் செயல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வைப் பெற, இந்த குற்றப்பத்திரிகை முக்கிய ஆதாரமாக அமைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Union Minister and Tamil Nadu BJP Election In-charge Piyush Goyal released a list of corruption allegations against the DMK government, titled “The Stalin Government in the Dock.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.