தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக, கடந்த சனிக்கிழமை வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் நேற்று(மார்ச் 29, ஞாயிறு) தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது.
இதில் முக்கியமாக, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்த தொகைக்கு வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை வாங்கலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இதுபற்றி விளக்கமளித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவருமான கனிமொழி,
"இல்லத்தரசி கூப்பன் என்கிற ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது போலவே, வருமான வரி செலுத்தாத தகுதியான பெண்களுக்கு இது வழங்கப்படும்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பெண்களுக்கு கேஸ் அடுப்பு கொடுக்கப்படும் என்றார். 'ஒரு பர்னர் உள்ள அடுப்பு கொடுக்கலாமே, அதுவே போதும், செலவு குறையும்' என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால் கலைஞர் இரண்டு பர்னர் உள்ள அடுப்பு தரச் சொன்னார்கள். பெண்கள் தங்கள் சமையல் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தவோ வேலைக்குச் செல்லவோ பயன்படும் என்று கூறினார்கள்.
அதுபோல இப்போது பெண்களுக்கு எந்த பொருள் தேவையோ இந்த கூப்பன் மூலமாக வாங்கிக்கொள்ளலாம். ஒரு வாஷிங்மெஷின் வாங்கினால் கையால் துணியை துவைக்கத் தேவையில்லை. அந்த நேரம் அவர்களுக்கு மிச்சப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு வேலை செய்ய முடியும்.
நாங்கள் எல்லாருக்கும் ஒரு ஃபிரிட்ஜ் கொடுக்கலாம். ஆனால் சில பெண்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வைத்திருக்கலாம். அவர்களுக்கு வேறு பொருள் தேவைப்படலாம். அதனால்தான் இந்த கூப்பன் முறை. பெண்களின் வேலைச் சுமையை குறைக்கும்பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அந்த வலி தெரியும்" என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், "2021 தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை படிக்கக்கூட தனக்கு நேரம் இல்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை" என்றார்.
Summary
Coupons Worth Rs8,000 for Women, Why? Kanimozhi Explains about dmk manifesto
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
தமிழ்நாட்டுக்கும் அதன் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையே தேர்தல்: கனிமொழி எம்.பி.
திமுக முடக்கிய திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : இபிஎஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



