சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 100 சதவீதம் ஆட்சிக்கு வராது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வீட்டு வரி 100% உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கடைகளுக்கான வரி 105% உயர்ந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். குப்பைக்கு கூட திமுக அரசு வரி வசூலித்தது என குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''ஏராளமான வரிகளைச் சுமத்தி மக்களை கடனாளியாக்கியுள்ளது திமுக அரசு. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாட்டிற்கு வாங்கிக்கொடுத்துள்ளது திமுக.
திமுக அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கு சேர்ந்துள்ளது என்பது மக்களுக்குத் தெரியும். மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள கூப்பன் திட்டம், கொள்ளை அடிப்பதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்தவர்கள் கூப்பன் கொடுப்பார்கள். ஆனால், அவர்களுக்கு பணம் கொடுத்தால்தான் கூப்பன் கிடைக்கும். இந்த பிராண்டு பொருள்கள்தான் வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவார்கள்.
அதிமுகவில் அவ்வாறு இல்லை. பாரபட்சமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் கொடுக்கப்படும். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ் கொடுக்கப்படும்.
தாய்மார்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் கொடுக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 400 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ. 2 ஆயிரம் கொடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தொடரும். பாதுகாக்கப்பட்ட நிலையான குடிநீர் வழங்கப்படும்.
காவிரி - குண்டாறு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். தடுப்பணைகள், குடிமராமத்துப் பணிகள் நடத்தப்படும். ஏழை விவசாயிகளுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.
விவசாயிகள், நெசவாளர்கள் பயன்பெறும் திட்டங்கள் அறிவிக்கப்படும். மீண்டும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
Summary
projects stalled by the DMK will continue: Edappadi palanisamy campaign paramakudi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

கரோனா வைரஸைவிட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஏப். 15ல் குமரியில் பிரதமருடன் பிரசாரம்; 210 தொகுதிகளில் வெல்வோம்: இபிஎஸ் பேட்டி

மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள்: திமுக அறிக்கையை விமர்சித்த இபிஎஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


