அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 8 ஆவது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுக திட்டங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் கொண்டுவரப்படும். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெல்லும். எடப்பாடி தொகுதியில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி தொகுதியில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. திமுக ஏன் தில்லியுடன் போட்டி போட வேண்டும்? திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.
வருகிற ஏப். 15 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் கன்னியாகுமரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்துகொள்கிறேன்.
அதிமுகதான் பிரதான கட்சி, தற்போதைய எதிர்க்கட்சி. திமுக - தவெக இடையில்தான் போட்டி எனக் கூறுவது தவெக தலைவர் விஜய்யின் அறியாமையின் வெளிப்பாடு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது வீட்டுச் சிறையில் இருந்ததாக ஆ. ராசா கூறியதைத்தான் நான் கூறினேன்.
அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்" என்று கூறினார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palanisamy press meet
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

நேர்மையான தேர்தலுக்காகவே அதிகாரிகள் மாற்றம்! திமுகவுக்கு ஏன் பயம்? இபிஎஸ்

ஏப். 8, 9ல் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் இபிஎஸ் பிரசாரம்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


