தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோபியில் 9-ஆவது முறையாக செங்கோட்டையன் போட்டி: விசில் சின்னத்தில் முதல்முறை!

கோபியில் விசில் சின்னத்தில் முதல்முறையாகப் போட்டியிடும் செங்கோட்டையன்!

News image

Sengottaiyan to file nomination from Gobichettipalayam; asserts TVK ready for 2026 TN poll battle

Updated On :29 மார்ச் 2026, 8:13 am

கோபியில் முதல்முறையாக விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார் செங்கோட்டையன்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 29) வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னையில் பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் களம் காணுகிறார். பல்வேறு வாக்குறுதிகளுடன் தவெக தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது.

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 9-ஆவது முறையாக போட்டியிடும் தமிழக முன்னாள் அமைச்சரும் அரசியலில் எம்ஜிஆர் காலத்திருந்தே களம் கண்டு வரும் மூத்த தலைவருமான கே. ஏ. செங்கோட்டையன் இம்முறை தமிழக வெற்றிக் கழகம் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார். அவர் அத்தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் (கோபி) 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திலிருந்து விசில் சின்னத்துக்கு மாறி போட்டியிடுவது அவருக்குச் சாதகமா பாதகமா என்பதற்கான பதில் வாக்கு எண்ணிக்கை நாளான மே. 4-இல் தெரிய வரும்.

Summary

Sengottaian will contest in Whistle symbol for the very first time in his longstanding political carreer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.