மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டது குறித்து...

News image

எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை சோதனையிடும் அதிகாரிகள் - எக்ஸ்

Updated On :29 மார்ச் 2026, 11:39 am

கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 29) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலையேற்றுள்ள அதிமுக, தனது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, அமமுக, தமாக, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிதாக இணைந்துள்ள சிங்கத் தமிழர் முன்னேற்றக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டுள்ளது.

தேர்தலையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 193 தொகுதிகளில் பிரசாரம் செய்திருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜனுடன் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிராசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தேர்தல் பறக்கும் படையிலர் அவரின் வாகனத்தை இடைமறித்து சோதனை நடத்தினர். சுமார் 15 நிமிடங்களுக்கு இந்த சோதனை நடைபெற்றது. பின்னர், பிரசார வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Summary

Flying Squad Conducts Inspection of Edappadi Palaniswamis Vehicle in kanyakumari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.