பிரதமர் மோடியின் கேரள பயணத்தையொட்டி இன்றும் நாளையும்(மார்ச் 28, 29) கோவையின் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வருகிற ஏப். 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பிரதமர் மோடி கேரளத்தில் பாலக்காடு, திருச்சூர் ஆகிய பகுதிகளில் நாளை(மார்ச் 29) பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து பிரசாரம் செய்வதுடன் சாலை வலமும் மேற்கொள்கிறார்.
இதையொட்டி பிரதமர் மோடி நாளை மதியம் 2 மணியளவில் கோவை வருகிறார். கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பாலக்காடு செல்கிறார்.
இதனால் கோவையின் முக்கிய பகுதிகளில் நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவினாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Summary
PM Modi visit to Kerala: Drones banned in Coimbatore today and tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆட்சியா்

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!

பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

