வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப். 23 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் அறிவிப்பையடுத்து கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரசாரத்தை மயிலாப்பூரில் தொடங்கினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற ஏப். 2 ஆம் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி தனது தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதனிடையே, ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அதேபோல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இந்த வார இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், தேமுதிக - 10, விசிக - 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 5, மதிமுக - 4, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, மனிதநேய மக்கள் கட்சி - 2, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
Summary
Chief Minister M.K. Stalin to start Election campaigning from April 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்

ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! சுற்றுப்பயண விவரம்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


