மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

News image

புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் - X

Updated On :11 ஏப்ரல் 2026, 3:21 am

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்று புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

நேற்று தஞ்சாவூரில் தனது 4-ம் கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அவர் இன்று புதுக்கோட்டை, திருப்பத்தூரில் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக இன்று காலை புதுக்கோட்டை வந்த அவர், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டு திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"திமுகவின் வெற்றி வாய்ப்பு அமோகமாக சிறப்பாக இருக்கிறது. தோல்வியில் உச்சத்திற்குச் சென்றுவிட்டார் பழனிசாமி. அதனால் விரக்தியில், எங்களுக்கு நிதி மேலாண்மையைக் கையாளத் தெரியவில்லை என்று பேசி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தோம். இங்குள்ள மக்களின் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் வந்தாலும், எத்தனை கட்சிகள் வந்தாலும் அவர்கள் என்ன செய்தாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது.

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றியுள்ளனர். இது போன்று என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இதற்கு மேலும் செய்வார்கள், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

அதிமுகவை தில்லியில் அடமானம் வைத்துவிட்டார்கள். அதிமுகவை குத்தகைக்கு விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களை தில்லிதான் ஆள்கிறது. அதிமுக என்ற திராவிட கட்சி இப்படி போனதை நினைத்து வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். அதனால் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும்தான் போட்டி.

நடிகர்கள் உள்ளிட்ட யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். நடிகரின் வாகனத்தின் பின்னால் சென்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாவதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் திருந்துவார்கள்" எனத் தெரிவித்தார்.

Summary

DMK will win 234 constituencies: CM MK stalin campaign in pudukottai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.