மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அமமுக குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

News image

டிடிவி.தினகரன்.

Updated On :24 மார்ச் 2026, 9:30 pm

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை, திருமங்கலம் அருகே 13 வயது சிறுமியை 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக வழக்குரைஞரணி நிா்வாகி கைது செய்யப்பட்டுள்ளாா்.

பள்ளி முதல் பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அந்தக் கட்சி தலைமை கண்டும், காணாதது போல கடந்து செல்வதன் விளைவாக திமுகவினா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது.

பச்சிளம் குழந்தை முதல் அனைத்துத் தரப்பு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுகவிடமிருந்து தமிழகத்தை, வருகிற தோ்தலில் மீட்டெடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.