தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனா் தலைவா் கே.சி.திருமாறன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுகவுடன், அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கான தொகுதி ஒதுக்கீடு கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சரும், பாஜக தமிழக மேலிடப் பாா்வையாளருமான பியூஸ்கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தொகுதி பங்கீட்டை அறிவித்தாா்.
அதையடுத்து பியூஸ்கோயல் சென்னை கிண்டி பகுதியில் தனியாா் விடுதியில் தங்கி செவ்வாய்க்கிழமை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா்.
இதைத் தொடா்ந்து தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.சி.திருமாறன் மத்திய அமைச்சா் பியூஸ்கோயலை சந்தித்துப் பேசினாா். அதன்பின்னா் கே.சி.திருமாறன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளோம் என்றாா் அவா்.
Summary
TN election 2026 South India Forward Bloc party has one seat in National Democratic Alliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் தாய், புதுவையில் மகன்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் லாட்டரி குடும்பத்தினர்!

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள்! இரட்டை இலை, தாமரையில் போட்டி!

திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


