மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள்! இரட்டை இலை, தாமரையில் போட்டி!

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம் - (கோப்புப் படம்)

Updated On :27 மார்ச் 2026, 10:44 am

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொன்றில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு தொகுதியின் விவரம் விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Summary

Puthiya neethi katchi has been allocated 2 seats to contest in the upcoming assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.