கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் குறைந்த மற்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
குறைந்த வாக்குகள்: சென்னை தி. நகர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ஜே.கருணாநிதி 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் சி.கே. சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எஸ். பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்திலும், மேட்டூர் தொகுதியில் பாமக சார்பில் எஸ். சதாசிவம் 656 வாக்குகள் வித்தியாசத்திலும், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்திலும், கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் கே. அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர். ராதாகிருஷ்ணன் 862 வாக்குகள் வித்தியாசத்திலும், நெய்வேலி தொகுதியில் திமுக சார்பில் சபா ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்திலும், ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் கே. தேவராஜி 1,091 வாக்குகள் வித்தியாசத்திலும், கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் தாமோதரன் 1,095 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர்
அதிக வாக்குகள்: ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் இ. பெரியசாமி 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார்.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் எ.வ. வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் ஏ. கிருஷ்ணசாமி 94,110 வாக்குகள் வித்தியாசத்திலும், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என். நேரு 85,109 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 70,384 வாக்குகள் வித்தியாசத்திலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு 60,992 வாக்குகள் வித்தியாசத்திலும், திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி 59,680 வாக்குகள் வித்தியாசத்திலும், மணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் எஸ். கதிரவன் 59,618 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

சூலூரில் முதல் வெற்றி பெறும் முனைப்பில் திமுக!

நான்குனேரியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ், அதிமுக!

‘தூத்துக்குடி தொகுதியில் 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்’
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


