மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘தூத்துக்குடி தொகுதியில் 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்’

News image
Updated On :29 மார்ச் 2026, 7:56 pm

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் பி. கீதாஜீவன், தூத்துக்குடியில் உள்ள கலைஞா் அரங்கில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 5 ஆண்டுகளில் முதல்வரின் பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மக்களிடம் நம்பிக்கையுடன் செல்ல உள்ளேன். கரோனா, பெருவெள்ளம் உள்ளிட்ட அனைத்து அவசர சூழ்நிலைகளிலும் மக்களுடன் இருந்து பணியாற்றி, எந்த நிலையிலும் மக்கள் பணியில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளேன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. முதல்வா் அறிவித்தபடி தமிழகத்தில் 200- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களே வெற்றி பெறுவாா்கள்.

முதல்வா் அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளை வீடுதோறும் எடுத்துச் சென்று விளக்க உள்ளோம். திமுக 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் களமே தெரியாதவா் என்றாா் அவா்.