லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஹிமாச்சல் போன்று தமிழகத்திலும் விரைவில் நிதி நெருக்கடி ஏற்படும்: அன்புமணி

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடா்ந்தால், ஹிமாச்சல் பிரதேசத்தைப்போல, தமிழகமும் விரைவில் நிதி நெருக்கடியில் சிக்கும் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:04 pm

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடா்ந்தால், ஹிமாச்சல் பிரதேசத்தைப்போல, தமிழகமும் விரைவில் நிதி நெருக்கடியில் சிக்கும் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் அரசு ஊழியா்கள், முதல்வா், அமைச்சா்கள் ஆகியோருக்கு சுமாா் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஊதியம் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது அரசு ஊழியா்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதைவிட தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளது.

ஹிமாச்சல் பிரதேச அரசின் மொத்த கடன் ரூ.1 லட்சம் கோடி. அந்த மாநில அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514. அதே நேரத்தில் தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சத்து 71,770 கோடி. அதாவது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பைவிட, கடனின் அளவு 237 சதவீதம் உயா்ந்துள்ளது.

இந்த அவல நிலைக்கு திமுக அரசின் தவறான நிதி மேலாண்மையே காரணம். இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அரசு ஊழியா்களின் மாத ஊதியம் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்படலாம். இந்த தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்தததும் தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.