மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தமிழக வாழ்வுரிமைக் கட்சி?

திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாகத் தகவல்...

News image

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் - X | Velmurugan.T

Updated On :20 மார்ச் 2026, 8:08 am

திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு முடிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டுமெனவும் தங்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக வாக்குறுதி அளிக்க வேண்டுமெனவும் தவாக கோரியிருந்தது.

ஆனால், திமுக ஓரிரு தொகுதிகளை மட்டும் தரவிருப்பதாகக் கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியேற கட்சியின் தலைவர் வேல்முருகன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தவாக, செல்வாக்கு உள்ள தொகுதிகளில் மட்டும் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நாளை மறுநாள்(மார்ச் 22) அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Summary

Tamizhaga Vazhvurimai Party is leaving the DMK alliance: sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.